இன்று முதல் தவெக தலைவர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க ஒன்றிய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்த நிலையில் இன்று முதல் பாதுகாப்பு வழங்க தொடங்கியது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 8 முதல் 12 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய உள்துறை சில தினங்களுக்கு முன்பாக த.வெ.க தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியது. இந்த Y பிரிவு பாதுகாப்பில் இரண்டு பிளாக் கேட்ஸ் கமெண்டோ வீரர்கள், ஸ்பெஷல் செக்யூரிட்டி ஆபிசர் இருவர் உள்ளிட்ட பாதுகாப்பு போலீசார் மத்திய அரசால் கொடுக்கப்பட்டு இரண்டு வாகனங்களோடு பாதுகாப்பு வழங்குவர். ஆனால், நேற்று வரை த.வெ.க தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக மத்திய உள்துறை, Y பிரிவு பாதுகாப்பு கொடுத்திருந்தாலும், அதற்கான ரிவியூ மீட்டிங் தொடங்கப்படாமல் இருப்பதால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சொல்லப்பட்டது.
இந்நிலையில் செக்யூரிட்டி ரிவிவ் கமிட்டி ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க தொடங்கியது. சுழற்சி முறையில் 24 மணி நேரமும் 8 முதல் 12 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.