சென்னையில் மிக மோசமான அளவில் காற்று மாசு பதிவு!

 
diwali

பட்டாசுகளை வெடிப்பதால்‌ நம்மை சுற்றியுள்ள நிலம்‌, நீர்‌, காற்று உள்ளிட்டவை பெருமளவில்‌ மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால்‌ எழும்‌ அதிகப்படியான ஒலி மற்றும்‌ காற்று மாசினால்‌ சிறுகுழந்தைகள்‌. வயதான பெரியோர்கள்‌ மற்றும்‌ நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள்‌ உடல்‌ அளவிலும்‌ மனதளவிலும்‌ பெரும்‌ பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்‌. இதன் காரணமாக பொதுமக்கள்‌ குறைந்த ஒலியுடணும்‌, குறைந்த அளவில்‌ காற்று மாசுபடுத்தும்‌ தண்மையும்‌ கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது.

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தீபாவளிக்கான சில டிப்ஸ்... | Tips For A  Safe And Healthy Diwali - Tamil BoldSky

இந்த சூழலில் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. குறிப்பாக சென்னையில் பட்டாசு  வெடித்ததன் காரணமாக காற்றின் தர குறியீடு 200 தாண்டியது. காற்று மாசு படும்போது ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படக்கூடும். இதய நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதனால் பாதிப்படைவார்கள்.

வெடி

இந்நிலையில் சென்னையில் மிக மோசமான அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 316ஆகப் பதிவாகியுள்ளது. 101-200 என்ற அளவு மிதமான காற்று மாசு என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வேளச்சேரி-301, அரும்பாக்கத்தில்-260, ஆலந்தூர்-254, ராயபுரம்-227, |கொடுங்கையூரில்-129, கும்மிடிப்பூண்டி-241, வேலூரில்-230, கடலூரில்-213 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியுள்ளது.