வாழ்வில் ஏற்படும் இன்னல்களைக் களைந்தெறிய இந்த அம்பிகையை ஒரு முறை தரிசித்து வாருங்கள்..!

 
1

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஈங்கோய் மலை என்னும் இடத்தில் மரகதாசலேஸ்வரர் திருக்கோயிலில் குடியிருக்கிறாள் மரகதாம்பிகை. அம்மனின் சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடமாக அழைக்கப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடப்பட்ட கோயில்களுள் ஒன்றாகும்.

கரூர் மாவட்டத்தில் குளித்தலையில் இருந்து காவிரி நதியைக் கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வட கரையில் இத்தலம் அமைந்திருக்கிறது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. இது மரகதமலை என்றும் அழைக்கப்படு கிறது.  அகத்திய மாமுனிவர் ஈ வடிவில் தரிசித்ததால் இது ஈங்கோய் மலை என்று அழைக்கப்படுகிறது. 

தலவரலாறு:
பிருகு முனிவரை அறியாதவர் யாருமே இல்லை என்று சொல்லலாம். அகிலமே எம்பெருமான் என்று வாழ்ந்துகொண்டிருந்தவர் அவர். சிவாலயங்களுக் குச் சென்றாலும் எம்பெருமானை மட்டுமே வணங்குவார் அருகில் இருக்கும் அம்மனை கண்டுகொள்ளவே மாட்டார். ஒருமுறை இருவரும் கயிலையில் அமர்ந்திருக்க அவர்களை வழிபட வந்த பிருகுமுனிவர் சிவனை மட்டும் வழிபடவேண்டுமே என்று வண்டு வடிவம் எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். ஆனால் எம்பெருமான் பிருகு முனிவர் தேவியையும் வழிபட வைக்க விரும்பினார். சிவனின் இடப்பாகம் வேண்டி பார்வதி தேவி இத்தலத்தில் வந்து தவம் புரிந்தாள்.

ஆதிசேஷனுக்கும், வாயுபகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. வாயுபகவான் தன்னுடைய பலத்தை நிரூபிக்க காற்றை பல மாக வீச செய்தார். ஆதிசேஷன் மலையை இறுக சுற்றிக்கொள்ள அப்போது அந்த மலையின் சிறு சிறுபாகங்கள் ஆங்காங்கே பூமியில் தெறித்து விழுந்தன. அப்படி விழுந்த பாகத்தின் ஒரு பகுதியே இந்த மரகதமலை என்கிறார்கள்.. 

தலசிறப்பு:
இத்தல இறைவன் பச்சை நிற கல்லால் மரகதத்தால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இவர் மரகதாசலேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. பார்வதி தேவி சிவனை நினைத்து இங்கு தவம் புரிந்ததால் இது சிவன்மலை என்றும் சக்திமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மரகதாம்பிகை நின்ற கோலத் தில் வீற்றிருக்கிறாள். முகப்பு மண்டபத்தில் ஒரு புறம் சிறிய லிங்கம் அம் பிகை இருக்கிறார்கள். இங்கு நந்திக்கு முன் பலிபீடம் உள்ளது. இவளது கரு வறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறையில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மகிஷாசுரனும், அருகில் மற்றொரு துர்கை சாந்த சொரூபி யாகவும் உள்ளனர். ஆக ஒரே இடத்தில் இரண்டு துர்க்கை இங்கு இருப்பது மிகவும் விசேஷம். இங்கிருக்கும் தலவிருட்சம் புளியமரம் என்றாலும் சுந்த ரரின் சாபத்தால் இங்கு புளியமரம் இல்லை.

மாதசிவராத்திரியின் போது மூன்று நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளிகதிர்கள் விழும்போது லிங்கத்தின் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷமாகும். வாழ் வில் ஏற்படும் இன்னல்களைக் களைந்தெறியும் அம்பிகையை தரிசித்து வர செல்வோமா?