உலகக் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டி: மும்பை விரைந்தார் நடிகர் ரஜினிகாந்த்!
Nov 15, 2023, 08:37 IST1700017631209

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய ஆகிய அணிகளும் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன. நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவிய நிலையில், பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதன்படி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.