கழிவறையில் வடமாநில தொழிலாளர்கள்.. மனிதநேயமற்ற செயல் - டிடிவி தினகரன் கண்டனம்..

 
ttv ttv

திருப்பூர் மாநகராட்சி பள்ளி கழிவறைக்குள் ஒருமாத காலமாக தூய்மை பணியாளர்கள்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை கூட ஏற்படுத்தித் தராத திருப்பூர் மாநகராட்சியின் மனிதநேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்குள், தனி அறை ஒன்றில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் தங்கி அங்கேயே உணவு சமைத்து உட்கொள்வது போன்று வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, தங்குவதற்கான இடத்தைக் கூட ஒதுக்காமல் கடந்த ஒரு மாத காலமாக மாநகராட்சி பள்ளி கழிவறையிலேயே தங்க வைத்திருந்தது முழுக்க முழுக்க மனிதநேயமற்ற செயலாகும். 

கழிவறையில் வடமாநில தொழிலாளர்கள்.. மனிதநேயமற்ற செயல் - டிடிவி தினகரன் கண்டனம்.. 

எனவே, பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தருவதோடு, இந்த விசயத்தில் அலட்சியப் போக்குடன் செயல்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.