கம்பம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது தொழிலாளி மரணம் - தினகரன் வேதனை!!

கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பதற்கு தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் , தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 9, 2024
உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கும்,…

பொதுமக்களின் உயிரை காப்பதற்காக கட்டப்படும் அரசு மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் தரமற்ற முறையிலும், உரிய கண்காணிப்பின்றியும் நடைபெறுவதே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே, அரசு மருத்துவமனைக்கான கட்டடப் பணிகளுக்கான கட்டுமானப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதோடு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தொழிலாளர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.