மின்கம்பத்திற்கு பதிலாக மரகுச்சி! கள்ளக்குறிச்சியில் சோகம்

 
ச்

சங்கராபுரம் அருகே பரமநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்திற்கு செல்லும் மின் கம்பி அறுந்து விழாமல் இருக்க மின் கம்பத்திற்கு பதிலாக குச்சியை வைத்து  மின்வாரிய அதிகாரிகள் முட்டுக் கொடுத்துள்ளனர். உயிரிழப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பரமநத்தம் காட்டுக்கொட்டாய் பகுதியில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் விவசாய நிலங்களுக்கு மின் கம்பங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் விவசாய நிலத்திற்கு செல்லும் மின் கம்பங்களில் ஓரிடத்தில் மட்டும் முறையாக மின் கம்பம் அமைக்கப்படாமல் மின்கம்பி அருந்து விழாமல் இருக்க மின்கம்பத்திற்கு பதிலாக குச்சியை பயன்படுத்தி முட்டுக் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மின் கம்பத்திற்கு பதிலாக வைக்கப்பட்டுள்ள அந்த குச்சி மிகுந்த பலவீனமான நிலையில் இருப்பதால் சிறிதளவு காற்று அடித்தால் கூட அந்த பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே உயிர் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்னதாக மின் கம்பத்திற்கு பதிலாக நடப்பட்டுள்ள குச்சியை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.