தொடரும் உட்கட்சிபூசல்- தவெக மாவட்ட செயலாளர் மீது அவதூறு பரப்பியதாக மகளிரணியினர் புகார்

 
ச் ச்

த.வெ.க மாவட்ட செயலாளர் மீது அவதூறு பரப்பியதாக பெண் தொண்டர் மீது மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகர்  விசாலாட்சிபுரம் காலாங்கரை பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண் தொண்டர் நேற்று த.வெ.க மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லணை  மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்  இந்நிலையில் த.வெ.க மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லாணை மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பிவரும் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சத்யாவின் பின்னணியில் உள்ளவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக 100க்கும் மகளிரணியினர், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். தமிழக முழுவதும்  பல்வேறு  மாவட்டங்களில் தவெக உட்கட்சி மோதல் துவங்கி உள்ள நிலையில் மதுரையிலும் தவெகவினர் மாறி மாறி புகார் அளித்து வருகிறார்.