"மகளிர் நலன் உறுதி செய்யப்பட வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 
gk vasan

உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் மகளிர் நலன் உறுதி செய்யப்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

gk

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் முன்னேற்றத்தில் பெண்கள் ஆற்றும் பங்கு பெரும்பங்காகும். பெண்கள் குடும்பத்தை மேம்படுத்துவதால் நாடே மேம்படுகிறது.பெண்கள் கல்வி, விளையாட்டு, தொழில், அறிவியல் என பல்வேறு துறைகளில் முத்திரைப் பதிக்கிறார்கள், சாதனை புரிகிறார்கள். கடந்த 10 ஆண்டுகால மத்திய பா.ஜ.க ஆட்சியில் அனைவருக்கும் வீடு அனைவருக்கும் சமையல் எரிவாயு, வங்கிக் கணக்குகள் போன்ற பல்வேறு திட்டங்களால் கிராமப்புற பெண்கள் முதல் நகர்ப்புற பெண்கள் வரை அனைவரும் பலனடைகிறார்கள்.

GK Vasan

மேலும் தாய் மற்றும் குழந்தை பராமரிப்புக்கு, பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள், பெண்கள் பாதுகாப்பு, தொழில் முனைவோருக்கு கடன் உள்ளிட்ட பலவற்றிற்கு மத்திய பா.ஜ.க அரசு திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்தி வருவதால் பெண்கள் முன்னேறுகிறார்கள். பொது மக்கள் பெண்களை பாதுகாக்க, கவுரவிக்க முன்வர வேண்டும். அப்போது தான் பெண்கள் உத்வேகம் அடைந்து, பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழ வழி வகுக்கும். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் ஆட்சியாளர்கள் பெண்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்த வேண்டும். மிக முக்கியமாக மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க சட்டத்தை கடுமையாக்கி, உச்சக்கட்ட தண்டனையை வழங்க முன்வர வேண்டும்.

உலக மகளிர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் மகளிர் முன்னேற, பாதுகாப்பாக வாழ அனைவரும் மகளிருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு மகளிருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.