சென்னையில் மகளிர் தின கொண்டாட்டம்.. நீங்களும் கலந்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா??

 
We The Women


மார்ச் 8ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளதை  முன்னிட்டு, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கமும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மகளிர் அதிகாரம் அளிக்கும் மையமும் இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக  தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்க தலைவி  கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் மற்றும் மகளிர் அதிகாரம் அளிக்கும் மையம்(அண்ணா பல்கலைக்கழகம்) இணைந்து, சர்வதேச மகளிர் தினத்தன்று(மார்ச் 8) பெண்களுக்கான போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், பட்டிமன்றம், கோலப்போட்டி, அடுப்பு இல்லாமல் சமைக்கும் சமையல் போட்டி, மாநில உடை அலங்கார போட்டி, பூக்கூடை அலங்காரம், காய்கறி அலங்காரம், தனி நடனம், ஜோடி நடனம், நேரடி போட்டிகள் என பலவிதமான போட்டிகளை நடத்தி, பெண்களை மகிழ்வித்து அவர்களது தனித் திறமைகளை வெளிக்கொண்டு வர இருக்கிறது.

  நம்ம CHENNAI

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம். மார்ச் எட்டாம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4:30 மணிக்கு நிகழ்ச்சிகள் முடிவடையும். பெண்கள் உற்பத்தி செய்த பல வகையான உற்பத்திப் பொருட்கள், கிராமத்துப் பொருட்கள், சிறு தானிய வகைகள், அலங்கார நகைகள், எம்பிராய்டரி துணி வகைகள் போன்றவை இங்குள்ள விற்பனை கூடங்களில் மார்ச் 8 ,9,& 10 என மூன்று நாட்களிலும் விற்பனைக்கு வைக்கப்படும். இங்கு, அறுபதுக்கும் மேற்பட்ட விற்பனை கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னையில் மகளிர் தின கொண்டாட்டம்.. நீங்களும் கலந்து கொள்ளலாம்.. எப்படி தெரியுமா??

இந்த நிகழ்வில் திரளான பெண்கள் கலந்துகொண்டு சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. அதேநேரத்தில் முன்பதிவு செய்வது அவசியம். 8056298790, 9884991232 ஆகிய எண்களுக்கு குறுந்தகவல் மட்டுமே அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம். சிறந்த தொழில் முனைவோர் விருது, சிறந்த சமூக நல விருது ஆகியவை விழாவில் வழங்கப்பட உள்ளன. இத்துடன் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கத்தின் மூலம் தயார் செய்யப்பட்டுள்ள தொழில் மலரான இ - புத்தகத்தை வெளியிட உள்ளோம். மத்திய - மாநில அரசு திட்டங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கான அனைத்து தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் சிறப்பாக தொழில் முனையும் தகவல்களைப் பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.