மதுக்கடையை அடித்து நொறுக்கி மது விற்றவரை ஓட ஓட விரட்டியடித்த பெண்கள்
பென்னாகரம் அருகே கிராமத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த, சந்துக்கடையை அடித்து உடைத்து தப்பி ஓடிய விற்பனையாளரை துரத்தி சென்ற பெண்களின் செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

தருமபுரி: பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்; மது விற்றவரை ஓட ஓட விரட்டியடித்தனர்#Dharmapuri | #TASMAC | #Women | #Pennagaram pic.twitter.com/haCiXVxpox
— PttvOnlinenews (@PttvNewsX) April 27, 2026
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் சந்துக் கடைகள் அதிகமாக இருக்கிறது. இதனை தடுக்க வலியுறுத்தி பல்வேறு ஊர்களில் பலமுறை பொதுமக்கள் காவல் துறையினரிடம் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பென்னாகரம் அருகே உள்ள போடூர் கிராமத்தில், நான்கு சந்து கடைகள் செயல்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்று நான்கு சந்துக் கடைகளையும் அடித்து உடைத்தனர். அப்போது ஒரு சந்துக் கடை விற்பனையாளர் கோவிந்தன், எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கோவிந்தனை, சுற்றி வளைத்து தாக்க முயற்சித்தினர். ஆனால் கோவிந்தன் பெண்களிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனால் பொதுமக்கள் அவரை பின்னாடி துரத்திக் கொண்டு ஓடினர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

