பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை 60க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பூரில் முதல்வர் விஜய்யின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை 60க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடுங்கையூர் வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் வெளியேறுவதை உடனடியாகச் சரிசெய்ய வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினால் தங்களை தவெகவினர் கடுமையாக விமர்சிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
வேதாந்த முருகப்ப சாலை குடியிருப்புவாசிகள், அடிப்படை வசதிகளுக்காக 2019 முதல் போராடி வருகின்றனர். இடம் தொடர்பாக நீதிமன்றத் தடை உத்தரவு உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக அவர்களுக்கு சட்டரீதியான எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தராமல், திமுக ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

