பெண்களுக்கு இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்! ஏன்?

 
heart attacks

அமெரிக்காவிலும் உலக அளவிலும் பெண்களின் இறப்பிற்கான முதன்மைக் காரணம் இதய நோய் என கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்குச் சிறிய இரத்த நாளங்களும் இதய அறைகளும் உள்ளன. அவர்களின் இதயக் கீழறைகளின் (இரத்தத்தை உந்தித் தள்ளும் அறைகள்) சுவர்களும் மெல்லியதாக இருக்கும்.

பெண்களுக்கு இதய நோய் அபாயம் அதிகரிப்பு

எண்டோமெட்ரியோசிஸ் என்பது, கருப்பையின் உள்புறச் சுவரைப் போன்ற திசுக்கள் கருப்பைக்கு வெளியே வளர்வது.

எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் 21% அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தீவிரமான இதய நோய் நிகழ்வுகளுக்கான அபாயம் 23% அதிகமாகும்.

இஸ்கிமிக் இதய நோய்க்கான அபாயம் 57% அதிகம், கரோனரி இதய நோய்க்கான அபாயம் 36% அதிகம்

நெஞ்சுவலி அல்லது மாரடைப்புக்கான ஒருங்கிணைந்த அபாயம் 62% அதிகமாகும்.

எண்டோமெட்ரியோசிஸ் இதய நோயை நேரடியாக ஏற்படுத்துகிறது என்பதை ஆய்வு நிரூபிக்கவில்லை.

எண்டோமெட்ரியோசிஸ் உள்ள பெண்களுக்கு இதய நோய் பரிசோதனையை முன்கூட்டியே மேற்கொண்டு, ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என Clinical Cardiology ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.