தமிழ்நாட்டு பெண்கள் இலவச தையல் இயந்திர திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி தெரியுமா..?
பெண்கள் வாழ்க்கையில் சொந்தமாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தோடு 01 ஆகஸ்ட் 2014 அன்று தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திட்டம்தான் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.
இந்தத் திட்டம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உடைய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் ஊசிகள், பாபின்கள், நூல்கள், கால்மிதி உள்ளிட்ட பாகங்களும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்களின் மனைவிகள், சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெண்களாக இருக்க வேண்டும்.
ஆவணங்களைப் பொறுத்தவரை ரேஷன் கார்டு நகல் ஆதார் கார்டு இருப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ், வயதுச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2, மொபைல் எண்/மின்னஞ்சல் ஐடி கொடுக்க வேண்டும்.
மேலும், 6 மாதம் தையல் பயிற்சி முடித்த சான்று விதவைச் சான்றிதழ் அல்லது கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் அல்லது ஆதரவற்றோர் சான்றிதழ் அல்லது மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுக்க வேண்டும். விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் மற்றும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிக்கும் எந்த மாநில பெண்களும் உரிய ஆதாரங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரம் பெற விருப்பமுள்ள பெண்கள் 6 மாதம் தையல் பயிற்சி முடித்தவராகவும், தையல் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மேலும் குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் 20 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும் மற்றும் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இது பெண்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் மாநில மொழிபேதங்களை அரசு பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் எந்த மாநில பெண்களும் உரிய ஆதாரங்களைக் கொண்டு இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலும்.
அதேபோன்று முகாம் வாழ் இலங்கை தமிழர்களும் விண்ணப்பித்து பயன் பெறலாம். அதேபோல், விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசு வேலைகளில் இருக்கக்கூடாது. இந்தத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரத்தைப் பெற பொது சேவை மையம் அல்லது இ சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் குடும்பப் பொறுப்பில் இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே சென்று வேலை செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் இந்த இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் பெண்களுக்கு ஒரு காக்கும் அரணாக அமைகின்றது. இந்த அற்புத வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நம்மால் முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தவும்.

