தவெக அரசில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முக்கியத்துவம்! குவியும் பாராட்டு

 
vijay

தவெக அரசில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி:

- சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம்
- திருவள்ளூர் ஆட்சியராக கவிதா நியமனம்  
- அரியலூர் ஆட்சியராக மிருணாளினி நியமனம்
- பெரம்பலூர் ஆட்சியராக சரண்யா அரி நியமனம்
- ராமநாதபுரம் ஆட்சியராக சிவகுரு நியமனம்

5 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஆட்சியர்கள் மாற்றப்பட்டிருப்பது நிர்வாக வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட அண்மைய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில், டி. சினேகா IAS செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், கே. பொற்கொடி IAS சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை செயலாளராக மூத்த பெண் அதிகாரி ஜெயஸ்ரீ முரளிதரன் IAS நியமிக்கப்பட்டுள்ளார். ஜி. லட்சுமி பிரியா IAS: முதலமைச்சர் விஜய்யின் இரண்டாவது தனிச் செயலாளராக (Secretary-II to CM) மூத்த பெண் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில் பெண் ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளுக்கு மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.