4 நாய்கள் கடித்து குதறியதில் பெண்ணின் காது கிழிந்தது! சென்னையில் பயங்கரம்

 
சேலத்தில் ஒரே நாளில் 60 பேரை கடித்து குதறிய நாய்!

சென்னையில் 4 நாய்கள் கீறி குதறியதில் பெண்ணின் காது கிழிந்தது.

30 ஆயிரம் நாய்கள் நாகாலாந்துக்கு கடத்தும் கொடூரம்.. நாய் கறிக்கு தடை விதித்த அரசு!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமனி தெருவை சேர்ந்தவர் உஷா (வயது 45). இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் உஷா நேற்று மாலை வேலைக்காக நடந்து சென்ற போது, அப்போது அவரது வீட்டருகே பாக்சர் வகை கொண்ட வளர்ப்பு நாய் ஒன்று திடீரென உஷாவின் சேலையை இழுத்து கீழே தள்ளி உள்ளது. பின்னர் அதனுடன் இருந்த மற்ற மூன்று நாய்களும் சேர்ந்து குதற துவங்கியது. இதில் உஷாவின் காது கிழிந்த நிலையில் தலை முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கீறல் காயம் ஏற்பட்டது.

உஷா, ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் உஷாவை நாய் பிடியிலிருந்து மீட்டுள்ளனர். காயமடைந்த உஷா அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். சேலையைப் பிடித்து கீழே தள்ளி தனது தலை,முகம், காது உள்ளிட்ட இடங்களில் குதறியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நாய் மற்றொரு நபரை கடித்ததாகவும் தற்போது  வெறிகொண்டு பலரையும் கடிப்பதாகவும், உடனடியாக நாயை மாநகராட்சி பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அப்பகுதி வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாயின் உரிமையாளர் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.