தலைமை பதவிகளில் கோலாச்சும் பெண்கள்- ஆய்வில் வெளியான தகவல்
அவதார் & செராமவுண்ட் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான 'இந்தியாவில், பணிபுரியும் பெண்களுக்கான நிறுவனங்கள்' குறித்த ஆய்வில் தலைமைப் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 20% ஆக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி,
• மிகவும் சிறந்த உள்ளடக்கமான நிறுவனங்கள் குறியீடு (MICI), ESG க்கான சிறந்த 10 நிறுவனங்கள், இந்தியாவில், பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த நிறுவனங்கள் ஆகிய மூன்று ஆய்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
• தலைமைப் பதவிகளில், பெண்களின் விகிதத்தில் மருந்துத் துறை முன்னிலை வகிக்கிறது. இத்துறையின் பெருநிறுவன நிர்வாகிகளில் 24.8% பேர் பெண்கள் ஆவர். இதனைத் தொடர்ந்து, 22% பெண்களுடன் GCC எனப்படும் இந்தியாவில் இயங்கும் சர்வதேசத் திறன் மையங்கள் அடுத்த நிலையில் உள்ளது.
• பெண் மற்றும் ஆண் பணியாளர் விலகல் விகிதங்கள் 20% என ஒரே மாதிரியாக உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பணி விலகுவதற்கான முதன்மையான காரணம் சிறந்த வேலை வாய்ப்புகளை எதிர்நோக்குவதே ஆகும்.
• உடல் நலம் / நல்வாழ்வு தொடர்பான சவால்களே, குழந்தை பராமரிப்புப் பொறுப்புகளை விடவும், பெண்கள் பணியிடத்தை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணமாக வெளிப்படுகிறது.
• மிகவும் உள்ளடக்கிய நிறுவனங்கள் குறியீட்டில் (MICI) உள்ள 100% நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் (PwD) மீது கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. இது 2019-ஆம் ஆண்டில் 58% ஆக இருந்தது.
• சிறந்த சுற்றுச்சூழல், நிலைத்தன்மை மற்றும் நிர்வாக நிறுவனங்களுக்கான (BCESG) முதல் பதிப்பின்படி, ஆற்றல் திறன் (90% நிறுவனங்கள் மற்றும் சூரிய ஆற்றலை ஏற்றுக்கொள்வது (80% நிறுவனங்கள்) மிகவும் பரவலான நிலைத்தன்மை உத்திகளாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பதிப்பில், BCWI பட்டியலில் 125 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. சிறந்த நிறுவனங்களில் ஒட்டுமொத்தப் பெண்களின் பிரதிநிதித்துவம் 35.7% ஆக நிலையாக இருக்கும் நிலையில், தலைமைத்துவத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் முதல்முறையாக 20% ஐ எட்டியுள்ளது. பணியாளர்களில் 44.6% பெண்களைக் கொண்ட ‘தொழில்முறை சேவைகள்' (Professional Services) துறை முன்னிலை வகிக்கிறது, அதைத் தொடர்ந்து ITES துறையில் 41.7% பெண்கள் உள்ளனர். மருந்துவத் துறையில் 25% பெண்கள், FMCG துறையில் 23% பெண்கள் மற்றும் உற்பத்தித் துறையில் 12% பெண்கள் தங்கள் உள்ளடக்கம் தொடர்பான முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்த ஆய்வு பெண்கள் மற்றும் ஆண்கள் வேலையை விட்டு விலகுவதற்கான காரணங்களையும் ஆய்வு செய்தது. சிறந்த நிறுவனங்களில், பெண்கள் மற்றும் ஆண்கள் வேலையிலிருந்து விலகும் விகிதங்கள் அனைத்து மட்டங்களிலும் சுமார் 20% அளவில் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், சிறந்த வேலை வாய்ப்புகளுக்கான தேடல் என்பதே அவர்கள் தங்கள் நிறுவனங்களை விட்டு வெளியேறுவதற்கான முதன்மைக் காரணம் ஆகும். குழந்தை பராமரிப்பு பொறுப்புகளை விடவும், உடல் நலம் / நல்வாழ்வு தொடர்பான சவால்கள் பெண்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளன. BCWI இந்தியாவின் பல்வேறு தொழில்கள், பகுதிகள் மற்றும் துறைகளில் இருந்து 365 நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்றது. அவற்றில், ஆட்டோமோட்டிவ், BFSI, கெமிக்கல், குழும நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள், இ-காமர்ஸ், குளோபல் கேபபிலிட்டீஸ் சென்டர் (GCC) போன்ற பல்வேறு தொழில்களைச் சேர்ந்த நிறுவனங்கள் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
2025-ஆம் ஆண்டிற்கான அவதார் (AVTAR) & செராமவுண்ட் (Seramount) ஆகிய நிறுவனங்களால் நடத்தப்பட்ட இந்தியாவின் பணிபுரியும் பெண்களுக்கான சிறந்த முதல் 10 நிறுவனங்களில் அசெஞ்சர் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Accenture Solutions Private Limited) முதல் இடத்திலும், ஆக்சா எக்ஸ்.எல். இந்தியா பிசினஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (AXA XL India Business Services Pvt. Ltd.) இரண்டாவது இடத்திலும்,கெய்ர்ன் ஆயில் அண்ட் கேஸ் (Cairn Oil and Gas) வேதாந்தா லிமிடெட் (Vedanta Limited) இ.ஒய்.(EY) மூன்றாம் இடத்திலும் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

