நெல் அரைக்கும் இயந்திரத்தில் பெண்ணின் தலைமுடி - கிருஷ்ணகிரியில் பரபரப்பு!!

 
tn

நெல் அரைக்கும் இயந்திரத்தில் பெண்ணின் தலைமுடி  சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Death

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூங்கிலேரி  கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி.  இவர் நேற்றிரவு நெல் அரைக்கும் இயந்திரத்தில் நெல்லை அரைத்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.  அப்போது எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமியின் தலைமுடி நெல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி கொண்டுள்ளது.  

tn

இயந்திரத்தின் வேகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட அவர்,  இயந்திரத்தின் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து அங்கு   பணியில் உடன் இருந்தவர்கள் உடனடியாக முத்துலட்சுமியை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.