துரைப்பாக்கம்: சூட்கேஸில் துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் சடலம்.. ஒருவர் கைது..
சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்து சாலையோரம் வீசிச்சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் சாலையோரம் கிடந்த சூட்கேஸில் இருந்து துற்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், சூட்கேஸை கைப்பற்றி அதனை திறந்து பார்த்தனர். அதில் ஒரு பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீஸார், உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை நடத்தியதில், சடலமாக மீட்கப்பட்ட பெண் மணலியைச் சேர்ந்த தீபா(வயது 32) என்பதும் அவர் திருமணமாகாதவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தீபாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது என விராசணையை தீவிரப்படுத்தினர். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் சூட்கேஸ் கிடந்த இடத்தின் அருகே வசித்து வந்த மணி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.