விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த மூதாட்டியை காணவில்லை - அதிர்ச்சி தகவல்!!

 
tn

18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல்கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட  தொகுதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.  வாக்குப்பதிவு அன்று பிரபலங்களும், பொதுமக்களும் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

makkal selvan vijay sethupathi took selfie with elderly fan while casting vote ans

அதன்படி நடிகர் விஜய் சேதுபதி தனது வாக்கை செலுத்த வாக்கு பதிவு மையத்திற்கு வந்திருந்தார்.  அப்போது சக்கர நாற்காலியில் நடக்க முடியாமல் வந்த மூதாட்டியுடன் அவர் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் ஆனது இணையத்தில் வைரலானது.இந்நிலையில் விஜய் சேதுபதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மூதாட்டி கடந்த 22 ஆம் தேதி முதல காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மூதாட்டியின் பேத்தி தனது சமூகவலைத்தள  பக்கத்தில், எனது பாட்டி டாக்டர் கௌசல்யா மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் 22/04/2024 முதல் காணவில்லை. அவருடைய  மகன் மனநலம் குன்றியவர்.  அவர்கள் இருவரும் கடந்த 22ஆம் தேதி வெளியே சென்றனர்.  அதன்பிறகு அவர்களை அணுக முடியவில்லை, டிரிப்ளிகேனில் சிக்னல் இருந்ததை மட்டுமே காவல்துறையால் கண்டுபிடிக்க முடிந்தது. தயவு செய்து இந்த ட்வீட்டை ஷேர் செய்து அவர்களை தேட உதவுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.