நெல் கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

 
death

திருமங்கலம் அருகே நெல் கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Death | थ्रेशर मशीन से लटककर महिला किसान की मृत्यु, दोनाड़ खेत क्षेत्र की  घटना | Navabharat (नवभारत)

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நக்கலக்கோட்டையை சேர்ந்தவர் ஒச்சுக்காளை(31). இவரது மனைவி வெண்ணிலா (27) திருமணமாகி 8 ஆண்டுகளாகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஒச்சுக்காளை உசிலம்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஒச்சுக்காளையும், வெண்ணிலாவும் நக்கலக்கோட்டை கிராமத்தினை சேர்ந்தவர்கள். வெண்ணிலாவின் அப்பா சின்னசாமி. இவரது வயல் நக்கலக்கோட்டையில்  உள்ளது , இதில் குதிரைவாலி பயிரிட்டுள்ளார்.  அறுவடைக்காக பண்ணிக்குண்டு கிராமத்தினை சோ்ந்த கணேசனின் கதிரடிக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, அறுவடை நடைபெற்றது. 
           
இன்று மாலை  அறுவடை இயந்திரத்தில் பயிர்கள் பிரிக்கும் பகுதிக்கு,  வெண்ணிலா பணியில் ஈடுபட்ட போது திடீரென அவரது தலைமுடி இயந்திரத்தில் சிக்கிகொண்டது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் முடி இருக்கும் தலைபகுதி  முழுவதும்  இயந்திரத்தில் மாட்டியதால் வெண்ணிலா அலறினார். உடனடியாக இயந்திரம் நிறுத்தப்பட்டு ,  மயங்கிய அவரை  108 ஆம்புலன்ஸ் மூலமாக திருமங்கலம் அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே  இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
             
இதனை தொடர்ந்து வெண்ணிலாவின் உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு மையத்தில் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.