சொகுசு காரில் வைத்து பெண் படுகொலை! காரைக்குடியில் பரபரப்பு
காரைக்குடி அருகே சொகுசு காரில் வைத்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த பாண்டி குமார் மனைவி மகேஸ்வரி (35) என்பது தெரிய வந்தது.
![]()
சிவகங்கை மாவட்டம் காரைக்குடிமருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பாண்டி குமார். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மகேஸ்வரி இன்று காலை தனது சொகுசு காரில் ஆவுடபொய்கை அருகே உள்ள சாய்பாபா காலனி பகுதியில் தைலமர காட்டுப்பகுதியில் அவரது காரிலேயே வைத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் கிடந்துள்ளது. மகேஸ்வரின் உடலை கைப்பற்றி குன்றக்குடி காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்கு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் தேவகோட்டை டிஎஸ்பி பொறுப்பு கௌதம் விசாரணை செய்து வருகிறார் கொலை நடந்த இடத்தில் சிவகங்கையில் இருந்து கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்து வருகின்றனர். மோப்பநாய் முகுளி சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இளம் பெண் காட்டுப்பகுதியில் காரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

