தவெக அரசை விமர்சித்து வீடியோ பதிவிட்ட பெண் கொலை
Nov 8, 2026, 16:13 IST1794134611447
நெல்லையில் தவெக அரசை விமர்சித்து வீடியோ பதிவிட்ட பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் வனோபி (34). இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சமூக பிரச்னை தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் உள்ள அறை ஒன்றில் வனோபி மர்மமான முறையில் இறந்து கிடந்ததார். கணவன் வீட்டில் இல்லாதபோது கொல்லப்பட்டு கிடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கணவன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வனோபி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

