கழிவறையில் குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் வீசிய பெண்! திருமணத்திற்கு முன்பே விபரீதம்

 
குழந்தை குழந்தை

திருச்செந்தூரில் தனியார் மருத்துவமனையில் இளம் பெண் கழிவறையில் குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


திருச்செந்தூர் அமலிநகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜெகல்வின் என்பவரது மகள் இளம்பெண் கிருத்திகா (வயது 23). இவரது தாய் தந்தை உயிரிழந்த நிலையில் கிருத்திகா அவரது பெரியம்மா பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். மேலும் கிருத்திகாவிற்கும் வீரபாண்டியன்பட்டிணத்தை சேர்ந்த ரஜோ என்ற இளைஞருடன் வரும் மே மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கிருத்திகா திடீர் வயிற்றுவலி காரணமாக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு திடீரென அதிகளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாகக்கூறி அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் யாருக்கும் தெரியாமல் கழிவறைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்ததாகவும், அப்போது குழந்தை இறந்தே பிறந்ததாகவும் கூறியுள்ளார். 

இதனையடுத்து பச்சிளங்குழந்தையை அங்குள்ள கழிவறை குப்பைத்தொட்டியில் வீசியதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கழிவறை குப்பைத்தொட்டில் இறந்தநிலையில் கிடந்த குழந்தையை மீட்டு கிருத்திகாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது கிருத்திவிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த ரஜோவுடன் நெருங்கி பழகியதால் கருவுற்றது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டிற்கு தெரியாமல் இருப்பதற்காக கழிவறையில் யாருக்கும் தெரியாமல் குழந்தை பெற்றதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக திருச்செந்தூர் மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.