காலிபிளவர் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் உயிரிழப்பு
Oct 9, 2025, 17:26 IST1760011009668
சென்னை, சைதாப்பேட்டையில் காலிபிளவர் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சரிதா. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் காலிபிளவர் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்த அந்த பெண்ணுக்கு வாயில் நுரை தள்ளியது. உடனே அவர் மயங்கிவிழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகே காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

