ரயிலில் Kettle வைத்து நூடுல்ஸ் சமைத்த பெண்..!

 
1 1

இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டியில் பயணித்த பெண்மணி ஒருவர், பெட்டியின் மின்சார பாயிண்ட்டில் எலக்ட்ரிக் Kettle வைத்து மேகி நூடுல்ஸ் சமைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.“சமையலறை எங்கும் எப்போதும் இருக்கும்” என நகைச்சுவையாகக் கூறிய அந்தப் பெண், அதே கெட்டிலில் 15 பேருக்குத் தேநீர் தயாரிக்கப் போவதாகவும் தெரிவித்தார். 


இந்தச் செயலைப் பல நெட்டிசன்கள் பொறுப்பற்றது என்று விமர்சித்தாலும், சிலர் சாமர்த்தியம் என்று பாராட்டியுள்ளனர். இது பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. 

ரயில் பெட்டிகளில் உள்ள மின்சார பிளக் பாயிண்ட்டுகள் கைபேசி, லேப்டாப் போன்ற குறைந்த மின்சார தேவைக்கான சாதனங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டவை. அவை 110V மட்டுமே வழங்கக்கூடியவை. எலக்ட்ரிக் கெட்டில், ஹீட்டர், குக்கர் போன்ற அதிக வாட்டேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவது இந்திய ரயில்வே விதிமுறைகளின்படி முற்றிலும் தடை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்தகைய சாதனங்களைப் பயன்படுத்தினால் மின்சுற்று அதிக சூடு அடைந்து, மின்கசிவு அல்லது தீ விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம்.