கந்துவட்டி கொடுமையால் பெண் தற்கொலை
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த பிரேமா என்பவர் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கந்துவட்டி கொடுமையால் மதுரை செல்லூரை சேர்ந்த பிரேமா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். மகளின் திருமண செலவுக்காக 2021-ல் கலையரசி என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றுள்ளார் பிரேமா. ரூ.2 லட்சம் கடனுக்கு மாதம் ரூ.20,000 வட்டி கேட்டு கலையரசி நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. பிரேமாவை தகாத வார்த்தைகளால் திட்டி, கடன் கொடுத்த கலையரசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி கலையரசி பிரேமாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்குள்ளான பிரேமா, இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பிரேமாவின் உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனே கைது செய்யக்கோரி ராஜாஜி மருத்துவமனை வெளியே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

