“இந்த வீடு அடமானம் வைக்கப்பட்டுள்ளது”- நிதி நிறுவனத்தின் செயலால் பெண் தற்கொலை

 
 கள்ளிப்பட்டி பகுதியில் வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி

கோபி அருகே உள்ள எரங்காட்டூரில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தவணை தொகையை செலுத்த கூறியதுடன், வீட்டு சுவற்றில் அடமானத்தில் உள்ளதாக எழுதியதால் மனமுடைந்த பெண் மண்ணெண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Image

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டி எரங்காட்டூர் தூசு நகரை சேர்ந்தவர் நாராயணதாஸ்(52). இவர் கோவையில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹேமப்பிரியா(45) டெய்லராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் கோவையில் வேலை செய்து வரும் நிலையில், மற்றொரு மகன் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.


இந்நிலையில் ஹேமப்பிரியா, கோபி அருகே கரட்டூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு அடமான கடன் பெற்று உள்ளார். தவணை தொகையை செலுத்த கல தாமதமான நிலையில், நேற்று நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் ஹேமப்பிரியாவின் வீட்டிற்கு சென்று தவணை தொகையை செலுத்துமாறு கூறி உள்ளனர். ஹேமப்பிரியா தவணை தொகையை செலுத்த கால அவகாசம் கேட்கவே, அதை ஏற்க மறுத்த நிதி நிறுவன ஊழியர்கள், வீட்டு சுவற்றில் இது அடமான சொத்து என எழுதி உள்ளனர். இதனால் மனமுடைந்த ஹேமப்பிரியா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீப்பற்ற வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆப்டஸ் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அந்நிறுவனம் பூட்டப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நால்வரையும் போலீசார் தேடி வருகின்றனர்.