#JUSTIN தமிழ்வழிக் கல்வி பாடப்பிரிவு நீக்கம் வாபஸ் - அண்ணா பல்கலை.,அறிவிப்பு

 
anna univ anna univ

வரும் கல்வியாண்டில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது 

anna

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் ஆகிய தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகளை ரத்து செய்யப்படுவதாக அண்ணா  பல்கலைக்கழக கல்வி படிப்புகளுக்கான மையத்தின் இயக்குனர் ரோஸிமின் திலகர் உத்தரவிட்டுள்ளார்.  6 உறுப்பு கல்லூரிகளில் மொக்கானிக்கல், சிவில் குரூப்களில் ஆங்கில பாடப்பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்படுகிறது என்றும் மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

tn

ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை,  நாகர்கோவில்,  தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் கட்டடவியல் மற்றும் இயந்திரவியல் தமிழ் வழி பொறியியல் பாடப் பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், தூத்துக்குடி ராமநாதபுரத்தில் இயந்திரவியல் பிரிவில் ஆங்கில மொழியும் ,அரியலூரில் கட்டடவியல் பிரிவில் ஆங்கில வழியும் ,  பட்டுக்கோட்டை,  திருக்குவளையில்   இயந்திரவியல் , மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய பாடங்களின் ஆங்கில வழியும் ரத்து செய்யப்படுவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது
anna university

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது என்று அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார்.இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்,  கடந்த ஆண்டு பத்துக்கும் குறைவான மாணவர்களில் தமிழ் மொழிக் கல்வியை தேர்வு செய்தனர். வரும் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் எந்த பாடப்பிரிவுகளும் நீக்கப்படாது. 11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நீக்கம் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக அவர் கூறியுள்ளார்.