"ஜி.பி.முத்து வீட்டின் முன் மாந்திரீக பூஜை"- போலீஸ் முன்பே அடிதடி
தூத்துக்குடியில் தனது வீட்டின் முன் மாந்திரீக பூஜை செய்ததாக எதிர்தரப்பினரை யூடியூபர் ஜி.பி.முத்து தட்டிக் கேட்டபோது மோதல் வெடித்தது.

உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் ஜி.பி முத்துவின் குடும்பத்திற்கும் எதிர்த்தரப்பை சேர்ந்த குடும்பத்திற்கும் நீண்ட காலமாக கோவில் இடம் தொடர்பாக பிரச்சினை இருந்த நிலையில், நள்ளிரவு ஜி.பி முத்து வீட்டின் முன்பு எதிர்தரப்பினர் மாந்திரீக பூஜை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை ஜி.பி முத்து தட்டிக் கேட்டபோது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
தகவலறிந்து நிகழ்விடத்திக்கு குலசேகரன்பட்டினம் போலீசார் வந்து விசாரணையை தொடங்கினர். அவர்கல் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசி தாக்கிக் கொண்ட நிலையில், இரு தரப்பை சேர்ந்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஜி.பி.முத்து புகாரில் 8 பேர், எதிர்தரப்பு புகாரில் ஜி.பி. முத்து குடும்பத்தினர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.எல்லைப் பிரச்சனை குறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் இருதரப்பையும் அழைத்து ஏற்கனவே அமைதி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது.

