எங்கள் வாழ்க்கையை இருளில் தள்ளிய உங்களுக்கு 'கருப்பு தீபாவளி' வாழ்த்துக்கள்.... போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது..!
ராயபுரம் மற்றும் திரு.வி.க., நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில், ஆங்காங்கே துாய்மை பணியாளர்கள், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டினர்.
போஸ்டரில், 'சென்னை மாநகராட்சி கமிஷனர் அவர்களே... சட்டத்திற்கு விரோதமாக 2,000 துாய்மைப் பணியாளர்களை, 'ராம்கி' ஒப்பந்ததாரரிடம் வீசி எறிந்து, எமது வாழ்க்கையை இருளில் தள்ளிய உங்களுக்கு, எங்களது கருப்பு தீபாவளி வாழ்த்துக்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலறிந்த பெரிய மேடு போலீசார், போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேரை கைது செய்தனர்.
'கருப்பு தீபாவளி' வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது. சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு எதிராக, 'கருப்பு தீபாவளி' வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள், 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடரும் துாய்மை பணியாளர்களின் போராட்டம்#SanitationWorkers #Protest #BlackDiwali pic.twitter.com/tBQ61wKnBO
— bnctimestn (@bnctimestn) October 21, 2025


