கிருஷ்ண ஜெயந்தி - வானதி சீனிவாசன் வாழ்த்து
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. காக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை “கிருஷ்ண ஜெயந்தி” என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு, வாயிற்களில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழிநெடுக பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வழிபட்டு மகிழ்வார்கள்.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் , ஸ்ரீ கிருஷ்ணரின் வருகையால் நம் இல்லமும், உள்ளமும், அன்பாலும், அமைதியாலும், அனைத்து வளங்களாலும், நலன்களாலும் நிறையட்டும்! அனைவருக்கும் இனிய கிருஷ்ணா ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.