லண்டனில் சர்வதேச விருதை வென்றது கேப்டன் மில்லர்
லண்டன் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை வென்றது கேப்டன் மில்லர்.
நடிகர் தனுஷ், பிரியங்கா நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி இத்திரைப்படம் வெளியானது. ஆக்ஷன் காட்சிகள், மேக்கிங் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இருப்பினும் கதை, திரைக்கதை நன்றாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படம் அயலக மொழிப்படத்துக்கான பிரிவில் தேர்வான நிலையில் விருதை தட்டி சென்றுள்ளது. லண்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில், ஜெர்மானிய படங்களான சிக்ஸ்டி மினிட்ஸ், தி ஹார்ட்பிரேக் ஏஜென்ஸி உட்பட படங்கள் இப்பிரிவில் தேர்வாகி போட்டியிட்ட நிலையில் கேப்டன் மில்லர் விருதை வென்றுள்ளது படக்குழுவினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.