அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி - குறைந்த வித்தியாசத்தில் தோல்வி!!

 
tt

தூத்துக்குடி, திருவள்ளூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.  திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் 5.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், தூத்துக்குடியில் கனிமொழி 3.92 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும்  பணி நேற்று நடைபெற்ற நிலையில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி 40க்கு 40 என்ற மகத்தான வெற்றியை பெற்றுள்ளது . 

t

திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . இவர் 7,96 ஆயிரத்து 956 வாக்குகளை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக பாஜகவின் பாலகணபதி 2 லட்சத்து 24 ஆயிரத்து 81 வாக்குகளை பெற்றார். 

தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 2,23,94 வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 838 வாக்குகளை பெற்றார்.

dd

விருதுநகர் தொகுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் வெற்றிபெற்றுள்ளார்.காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மூன்று லட்சத்து 85 ஆயிரத்து 256 வாக்குகள் பெற்றுள்ளார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மூன்று லட்சத்து  80 ஆயிரத்து 877 வாக்குகளை பெற்றுள்ளார்.   இருவருக்கும் ஆன வாக்கு வித்தியாசம் 4379 ஆகும்.  அதன்படி தமிழ்நாட்டில் குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த வேட்பாளராக விஜய பிரபாகரன் உள்ளார்.