திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா? - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பதில்..!

 
MK stalin

திருச்சி கிழக்கில் போட்டியா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.  

முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என, தி.மு.க.,வின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதற்கிடையே, புதுக்கோட்டையில் தி.மு.க., நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற, தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேரு பேசுகையில், ''சட்டசபையில் முதல்வர் விஜய், 'அப்பாவை காணோம்' என்கிறார்; வருவார், எவ்வளவு விரைவாக வர வேண்டுமோ, அவ்வளவு விரைவாக மீண்டும் சட்டசபைக்கு வருவார்; இது உறுதி,'' என்றார்.

இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதி என்பதையே, நேருவின் பேச்சு வெளிப்படுத்துவதாக பேசப்பட்டது.இந்நிலையில் இன்று (ஜூன் 26) திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''இன்னும் முடிவு செய்யவில்லை'' என ஸ்டாலின் பதில் அளித்தார்.