மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ல் தண்ணீர் திறக்கப்படுமா?

 
மேட்டூர் அணை : கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நீர் திறப்பு.. 

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 ல் தண்ணீர் திறக்கப்படுமா? என காவிரி டெல்டா விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திரூவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12 தேதி முதல் ஜனவரி 28 வரை தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்தேவை குறையும். அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர் நோக்கி ஜூன் 12 தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் குறித்த நாளான ஜூன் 12 தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு 222 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நெருப்பு எடுப்பு பகுதியில் மழை காரணமாக உபரிநீர் 96 டி.எம்.சி உபரிநீர் போக்கி வழியாக திறக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 8.6 டி.எம்.சி தண்ணீரும் குடிநீர் தேவைக்காக 31.05.26 இன்று வரை 18 டி.எம்.சி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு நீர் பாசன ஆண்டில் இன்று 31.05.26 வரை மேட்டூர் அணைக்கு 330 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் 79.16 அடியாகவும் நீர் வரத்து 1951 கனஅடியாகவும் உள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  மேட்டூர் அணை வரலாற்றில் 92வது ஆண்டில் ஜூன் 12ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே துவங்கினால் நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குறித்த நாளான ஜூன் 12ல் 20 ஆண்டுகள் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் 11 ஆண்டுகள் விவசாயிகளின் கேரிக்கையை ஏற்று ஜூன் 12க்கு முன்பாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் 60 ஆண்டுகள் காலதாமதமாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.