சேலத்தில் டிச.30ம் தேதி விஜய் பிரச்சாரம்?

 
ரூ.50,000 வாடகை, ரூ.50,000 டெபாசிட்- விஜய் கூட்டம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி ரூ.50,000 வாடகை, ரூ.50,000 டெபாசிட்- விஜய் கூட்டம் நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி

சேலத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விஜய்

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக வெளியே (open ground) நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் நாளை விஜய் பங்கேற்கிறார். கே.ஏ.செங்கோட்டையன் இணைந்ததற்குப் பிறகு மேற்கு மாவட்ட பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி செல்வாக்கை நிரூபிக்க செங்கோட்டையன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் 40 கேமராக்கள் பொருத்தப்பட இருந்த நிலையில் தற்போது 60 கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 16 ஏக்கர் பரப்பளவில் கண்காணிக்க கூடுதல் ட்ரோன் கேமராவையும் பயன்படுத்தி மைதானம் முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மூலம் வருகை தந்து ஓமலூர், இரும்பாலை, சீலநாயக்கன்பட்டியில் விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து சேலத்தில் விஜய் மக்களை சந்திக்கும் இடத்தை பொதுச்செயலாளர் ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.