திருச்சி கிழக்கில் வேட்பாளராக களமிறங்கும் வெல்லமண்டி நடராஜன்?

 
s

திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வருக்கு செங்கோலை பரிசாக வழங்கிய வெல்லமண்டி நடராஜன், போட்டோ எடுத்துக்கொண்டு வெற்றிக்குறி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சட்டசபை தேர்தலில் முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே இன்று நடைபெற்ற திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வருக்கு செங்கோலை பரிசாக வழங்கிய வெல்லமண்டி நடராஜன், போட்டோ எடுத்துக்கொண்டு வெற்றிக்குறி காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக வெல்லமண்டி நடராஜன் களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் தமிழக அரசியலை தலைகீழாக்க, அதிமுகவிலிருந்து சாரை சாரையாக புறப்பட்டவர்கள் தவெக கதவைத் தட்ட, அரசியல் மேடை முழுவதும் புதிய கூட்டணிக் காற்று வீசுகிறது. இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல, சத்யபாமா, ஜெயக்குமார் உள்ளிட்டோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகினர். இப்போது வெல்லமண்டி நடராஜனும் வந்திருப்பது தவெகவிற்கு கூடுதல் பலம். அதிமுக கொடியைத் தாங்கி திருச்சியில் ஒருகாலத்தில் வெற்றி நடை போட்ட வெல்லமண்டி நடராஜன் இப்போது தவெக வேட்பாளராக களமிறங்குகிறார். 2016-ல்21,894 வாக்கு வித்தியாசத்தில் அதிரடியாக ஜெயித்த அதே திருச்சி கிழக்கு இப்போது மீண்டும் அவரை நோக்கி திரும்புகிறது. முதலில் திருச்சி கிழக்கில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட
கு.பா.கிருஷ்ணனுக்கு திடீரென வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டதால் அந்தத் தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருக்கும் வெல்லமண்டி நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது