இப்படி கூட நடக்குமா..? ஒரு நாய் குட்டிக்காக கல்யாணத்தையே நிறுத்திய மணப்பெண்!

 
1

பிப்ரவரி 18ஆம் தேதி ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள காகா கோட்வாலி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்களுக்கு திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. மணமகள் தான்யாவின் குடும்பத்தினர் பேருந்து மற்றும் கார்களில் திருமண மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுடன் மணமகள் தான்யாவின் செல்லப்பிராணியான நாய்க்குட்டியையும் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்திருந்தனர். முதல் நாள் மாலை திருமண சடங்குகள் மகிழ்ச்சியாக நடந்து முடிந்தன. மறுநாள் காலையில் நகையை அணிவிக்கும் சடங்குகளும் நடைபெற்றது.

அந்த சமயத்தில் திருமண மண்டபத்தின் அருகில் கட்டப்பட்டிருந்த செல்லப்பிராணியான நாய்க்குட்டி தொடர்ந்து குறைத்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் எடுத்து எரிச்சல் அடைந்த மணமகனின் குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், அந்த நாயை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகளின் வீட்டார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிறகு இரு தரப்பிற்கும் வாக்குவாதம் முற்றி, மிகப்பெரிய கைகலப்பாக மாறி உள்ளது. இரு குடும்பத்தாரும் மண்டபத்திலிருந்து சேர்கள் மற்றும் கம்புகளை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதனால் மண்டபத்தில் திருமணத்தை பார்க்க வந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இரு குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட இந்த சண்டையில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அடிப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு இரண்டு குடும்பத்தார்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தனது செல்லப்பிராணியான நாயை தாக்கிய குடும்பத்தினருடன் இனி எனக்கு எந்த உறவும் வேண்டாம் என்று மனமகள் தான்யா தெரிவித்தார். மேலும் இந்த திருமணத்தை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் தரப்பில் சமாதானம் நடத்தியும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. பிறகு இரண்டு குடும்பத்தார்களும் பேசி திருமணத்தை ரத்து செய்ய சம்மதித்தனர். திருமணம் நின்று போனதால் மணமகன் குடும்பத்தினர் மிகுந்த சோகத்திற்கு உள்ளானார்கள். நாய் குறைத்ததால் ஏற்பட்ட சண்டை திருமணத்தையே நிறுத்தி உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.