தமிழக முதல்வர் விஜய் போடும் முதல் கையெழுத்து இந்த 2 திட்டங்களுக்கு தானா?

 
vijay

தமிழக முதலமைச்சராக விஜய்  இன்று காலை 10 மணிக்கு  பதவியேற்கிறார். அப்படி விஜய் முதலமைச்சராக பதியேற்றதும் தனது முதல் கோப்பில் எந்தத் திட்டத்திற்காகக் கையெழுத்திடுவார் என்பதுதான் தற்போது தமிழகத்தின் ‘ஹாட்’ டாபிக்.

2016-ல் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற போது 500 மதுக்கடைகளை மூடல், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களில் முதலில் கையெழுத்திட்டார். அதேபோல் 2021-ல் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதியேற்றதும் முதலில் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், ரூ.4000 கொரோனா நிதியுதவி, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 திட்டங்களில் கையெழுத்திட்டார்.

அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய் முதல் கையெழுத்து ஏதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. தவெக-வின் இந்த மாபெரும் வெற்றிக்கு பெண்களின் வாக்குகள் முக்கியக் காரணமாக இருந்ததால், அவர்களைக் கவரும் விதமான அறிவிப்புதான் முதல் திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் நிதி உதவி வழங்கக்கூடிய திட்டத்தில் விஜய் முதலில் கையெழுத்திடுவார் அல்லது திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கக்கூடிய திட்டத்தில் அவர் கையெழுத்திடுவார் என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் முதல் கையெழுத்து பெண்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும் என்பதில் அவரது கட்சி நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர்.

பதவியேற்பு விழா முடிந்த கையோடு, கோட்டைக்குச் சென்று விஜய் போடப்போகும் அந்த முதல் கையெழுத்தைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.