விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி! டிசம்பருக்கு பின் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி தொடர்பாக டிசம்பர் மாதத்திற்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. பூத் கமிட்டி, மக்களை சந்திப்பதில் மட்டுமே தற்போது த.வெ.க கவனம் செலுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது ,உறுப்பினர்கள் சேர்க்கையில் கூடுதல் கவனம் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் த.வெ.க, மக்கள் பயணத்தை முடித்த பின்னரே கூட்டணி குறித்து விஜய் முடிவு எடுப்பார் என கட்சி தரப்பு கூறுகிறது.
இதனிடையே கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.


