பெட்ரோல் விலை உயருமா..? - 80 டாலரைத் தொட்ட கச்சா எண்ணெய்; மத்திய அரசு பதில்..!!
ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான நேரடி மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Crude Oil) விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 80 டாலர் என்ற அளவைத் தொட்டுள்ளது.
மத்திய அரசின் நிம்மதி தரும் அறிக்கை:
சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாக உயர்த்தப்படாது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ:
-
தட்டுப்பாடின்றி விநியோகம்: போர்ச் சூழலால் எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்படாத வண்ணம், நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
-
விலை உயர்வு எப்போது?: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தற்போதைய நிலையைத் தாண்டி, எதிர்பார்த்ததை விட மிகக் கடுமையாக உயர்ந்தால் மட்டுமே உள்நாட்டில் விலையேற்றம் குறித்து அரசு பரிசீலிக்கும்.
-
பொதுமக்களுக்கு வேண்டுகோள்: இப்போதைக்கு விலையேற்றம் குறித்த அச்சம் தேவையில்லை என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

