பெட்ரோல் டீசல் விலை குறையுமா..? மத்திய மந்திரி பதில் இது தான்..!
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், மேற்காசிய போரின் போது வாங்கப்பட்ட எரிபொருளை இந்திய நிறுவனங்கள் அதிக விலை கொடுத்துதான் சுத்திகரித்து வருகின்றன.ஜூன் 30 வரை அடக்க விலையைவிட குறைவான விலையில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவை விற்பனை செய்யப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 74,781 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களுக்குகச்சாஎண்ணெய் விலை குறைவாக இருந்தால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்பது நியாயமான கேள்வியாக இருக்கும்.மார்ச், ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எஞ்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை. பெரியளவில் தேவை இருந்தாலும் எங்கும் விநியோகத்தில் இடையூறு, பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டதில்லை.
சர்வதேச சந்தையில் 2022 முதல் 2026 வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் முறையே 5.58% மற்றும் 6.23% உயர்ந்தன. ஆனால் நுகர்வோர்களுக்கு எந்த விலை உயர்வும் இல்லை. நமது நிதி அமைப்பு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றத்தை ஏற்றுக்கொண்டது.
இவ்வாறு ஹர்தீப் சிங் புரி கூறினார்.

