10 கிராம் தங்கம் விலை ரூ.1.55 லட்சம் ஆகுமா?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பான முதலீடு மற்றும் சொத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் புழக்கம் அதிகம். மேலும், நமது பாரம்பரியம் மற்றும் கலாசார நிகழ்வுகளில் முக்கிய இடம் வகிக்கிறது. அதனாலேயே நமது மக்களிடையே தங்கம் விலை மாற்றம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த மார்ச் மாதத்திற்கு முன்பு வரை தங்கம் விலை இனிமேல் ஏறுமுகத்தில் தான் இருக்கப்போகிறது. சாமானியர்களுக்கு தங்கம் என்பது வெறும் கனவு என்ற நிலை தான் இருந்தது. ஆனால் அதனை அமெரிக்கா - ஈரான் போர் மாற்றியமைத்தது. மடமடவென சரிந்த விலையால் வாடிக்கையாளர்கள் மிகுந்த உற்சாகமடைந்தாலும், தங்கத்தின் மீதான ஈடுபாடு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவருகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,600 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் வட்டி விகித உயர்வு குறித்த எதிர்பார்ப்பு குறைந்ததால், எதிர்காலத்தில் வட்டி குறைக்கப்படலாம் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் அரசு பத்திரங்களின் வருவாய் விகிதம் சரிந்ததால், தங்கத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.55 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புவிசார் அரசியல் பதற்றம் தீவிரமடைந்தால், தங்கம் விலையில் மேலும் மாற்றம் ஏற்படக்கூடும்.

