ஜனவரி முதல் பழைய செக் புத்தகம் செல்லாதா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!
சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் குறித்தும், வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வரும் குழப்பங்கள் குறித்தும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரும் 2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காசோலை முறை (CTS - Cheque Truncation System) செக் புக் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகச் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பரவி வந்தன. இந்தத் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் மக்களைத் திசைதிருப்பக் கூடியவை என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்பதையும் மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் எக்ஸ் தள அறிவிப்பு; தற்போது புழக்கத்தில் இருக்கும் காசோலை புத்தகங்கள் 2026ம் ஆண்டு டிச.31ம் தேதிக்கு பினன்ர் மாற்றப்பட உள்ளதாகவும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன காசோலை புத்தகம் 2027ம் ஆண்டு ஜன.1 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இது ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. தற்போதுள்ள சூழலில் காசோலை புத்தகங்களில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி கொண்டு வரவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
சமூக வலை தளங்களில் வரும் செய்தி தவறு, மக்களை திசைதிருப்பக்கூடியது. இத்தகைய விவகாரங்களில் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்பபோது அறிவிப்புகளை வெளியிடும். அதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.
It has come to the notice of the Reserve Bank of India that a message is circulating on social media claiming that the standard Cheque Truncation System (CTS) cheque books currently in use will change from December 31, 2026 and the new cheque books featuring updated security standards will come into effect from January 1, 2027. It is clarified that at present Reserve Bank of India is not introducing any such measures with regard to the CTS cheque books. As such, the message is factually incorrect and misleading. Members of public are requested to rely only on the information published by RBI from time to time in such matters.
— ReserveBankOfIndia (@RBI) November 7, 2026

