முதல்வர் படைப்பகத்தின் பெயர் மாற்றமா?
‘முதல்வர் படைப்பகம்’ பெயரிலிருந்து ‘முதல்வர்’ சொல் நீக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக அறிவார்ந்த சூழலை உருவாக்கும் வகையில், திமுக ஆட்சியில் சென்னை கொளத்தூரில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்புடன் கூடிய Co-Working Space, புத்தொழில் முனைவோர், ஐடி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி, தங்களின் இல்லங்களுக்கு அருகிலேயே பெண்களும் பணிபுரிந்திடும் பெரும் வாய்ப்பு முதல்வர் படைப்பகத்தின் மூலம் உருவாகும் என்பதால் இளைஞர்களும் பெண்களும் இந்த திட்டத்மிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ‘முதல்வர் படைப்பகம்’ பெயரிலிருந்து ‘முதல்வர்’ சொல் நீக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வெளியிட்டுள்ள டெண்டரில் வெறும் படைப்பகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக கொண்டு வந்த நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றி இருந்தது தவெக. மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தான் முதல்வர் படைப்பகம் என பெயர் வைக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியில் எந்த தீர்மானமும் கொண்டு வராமல் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

