முதல்வர் படைப்பகத்தின் பெயர் மாற்றமா? ‘முதல்வர் படைப்பகம்’ பெயரிலிருந்து ‘முதல்வர்’ சொல் நீக்கம்..!!
'முதல்வர் படைப்பகம்' பெயரிலிருந்து ‘முதல்வர்' சொல் நீக்கம்: மாநகராட்சி வெளியிட்டுள்ள டெண்டரில் வெறும் படைப்பகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் 16 இடங்களில் செயல்படும் முதல்வர் படைப்பகம் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவோர், ஸ்டார்ப் அப் நடத்துவோர் உள்பட பலருக்கும் பெரிதும் பயன்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் சென்னை கொளத்தூரில் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டது.
போட்டித் தேர்வுகளுக்கான நூல்களுடன் கூடிய நூலகம், கட்டணமில்லா இணைய வசதி, குளிரூட்டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள் மற்றும் கணினி உள்ளிட்ட அலுவலக கட்டமைப்புடன் கூடிய Co-Working Space, புத்தொழில் முனைவோர், ஐடி பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறுவது மட்டுமின்றி, தங்களின் இல்லங்களுக்கு அருகிலேயே பெண்களும் பணிபுரிந்திடும் பெரும் வாய்ப்பு முதல்வர் படைப்பகத்தின் மூலம் உருவாகும் என்பதால் இளைஞர்களும் பெண்களும் இந்த திட்டத்மிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
முதலில் சென்னை கொளத்தூரில் தொடங்கி வைக்கப்பட்ட முதல்வர் படைப்பகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் முதல்வர் படைப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. போட்டித் தேர்வுக்கு தயாராவோருக்கு பயன்படும் கல்வி மையம், உணவருந்தும் கூடம், ஸ்டார்ட் அப் அலுவலகங்கள் செயல்படும் தளம் உள்ளிட்டவை இங்கு இருக்கும். அமைதியான சூழல், இலவச வைஃபை வசதி, கணினி வசதி, ஏசி வசதி, இருக்கை வசதி என அனைத்தும் கிடைக்கும்.
இந்நிலையில், முதல்வர் படைப்பகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் படைப்பகம் என்பதற்கு பதிலாக 'படைப்பகம்' என சென்னை மாநகராட்சி டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள முதல்வர் படைப்பகத்தின் இயக்கம், பராமரிப்பு பணிகளை தனியார் மூலம் மேற்கொள்வதற்கான டெண்டரில் வெறும் 'படைப்பகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆட்சியில் திமுக அரசால் தொடங்கப்பட்ட, மாணவர்களுக்கு பெரும் பலன் அளித்த நான் முதல்வன் திட்டத்தின் பெயர் தற்போது 'திறன் தமிழ்நாடு' (TN Skill) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் படைப்பகத்தின் பெயர் மாற்றமா?
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 5, 2026
'முதல்வர் படைப்பகம்’ பெயரிலிருந்து ‘முதல்வர்’ சொல் நீக்கம்
மாநகராட்சி வெளியிட்டுள்ள டெண்டரில் வெறும் படைப்பகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது
TamilNadu | PoliticalNews | TenderIssue | GovernmentScheme#NewsTamil24x7 #ChennaiCorporation pic.twitter.com/qO5W8yAmCS
முதல்வர் படைப்பகத்தின் பெயர் மாற்றமா?
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 5, 2026
'முதல்வர் படைப்பகம்’ பெயரிலிருந்து ‘முதல்வர்’ சொல் நீக்கம்
மாநகராட்சி வெளியிட்டுள்ள டெண்டரில் வெறும் படைப்பகம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது
TamilNadu | PoliticalNews | TenderIssue | GovernmentScheme#NewsTamil24x7 #ChennaiCorporation pic.twitter.com/qO5W8yAmCS

