வீட்டுமனை பட்டா, தம்பிக்கு வீடு கொடுப்பதால் போன உயிரை திரும்பி வருமா? பிரேமலதா!

 
1 1

சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் கொலைக்கு நீதி கேட்டு தேமு​திக சார்​பில் திருப்​புவனத்​தில் நேற்று நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் பிரேமலதா பேசி​ய​தாவது:-

அஜித்​கு​மாரை போலீ​ஸார் அடித்தே கொன்​றுள்​ளனர். அவரைக் கொன்​றவர்​களுக்​கும் இது​போன்ற தண்​டனை கொடுக்க வேண்​டும். புகார் கொடுத்த நிகிதா குறித்து சரிவர விசா​ரிக்​க​வில்​லை. எனவே, இவ்​விவ​காரத்​தில் சிபிஐ உண்​மையை வெளிக்​கொணர வேண்​டும்.

தமிழகத்​தில் கடந்த ஒரு வாரத்​தில் வரதட்​சணைக் கொடுமை​யால் 4 பெண்​கள் தற்​கொலை செய்​துள்​ளனர். போதைப் பொருட்​கள் புழக்​கம் அதி​கரித்​து​விட்​டது. போதை வழக்​கில் 2 நடிகர்​களை கைது செய்​து, இந்த விவ​காரத்தை திசை திருப்​பு​கின்றனர். திமுக ஆட்சி என்​றாலே அராஜக​மும், ரவுடி​யிச​மும்​தான். அனைத்து காவல் நிலை​யங்​களி​லும், கைதி​களை விசா​ரிக்​கும் இடங்​களி​லும் சிசி​விடி கேம​ராக்​களை பொருத்த வேண்​டும். மக்​கள் புரட்சி வெடித்​தால் காவல் துறை தாங்​காது. மது ஒழிந்​தால்​தான் தமிழகத்​துக்கு விடிவு​காலம் பிறக்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொடர்ந்​து, அஜித்​கு​மார் வீட்​டுக்​குச் சென்​று, அவரது குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார். அப்​போது செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது:-

மடப்புரத்தில் ஒரு அப்பாவி இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணை கைதி கொலை இனி தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது. நிக்கிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இவ்வளவு செய்திருக்கிறார்கள் முதலில் அந்தப் பெண்ணை அழைத்து விசாரணை நடத்த வேண்டும். அஜித் குமார் கொலை வழக்கில் பின்னால் பல மர்மங்கள் உள்ளதாகவும் அந்த மர்மங்கள் வெளிப்பட வேண்டும். உண்மை நிலவரம் மக்களுக்கு தெரிய வேண்டும்.

தமிழக அரசு, அறநிலையத்துறை, காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? காவல் துறையினர் விசாரணை கைதிகளை அடிப்பதை முதலில் நிறுத்தி கொள்ள வேண்டும், வீட்டுமனை பட்டா, தம்பிக்கு வீடு கொடுப்பதால் போன உயிரை திரும்பி வருமா? புதிய சட்டம் இயற்றி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து வருபவர்களை அடிக்கும் உரிமையை பறிக்க வேண்டும், தனிப்படையை கலைத்திருந்தாலும் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்” என்றார்.

பின்பு விஜய் குறித்த கேள்விக்கு, “விஜய் சொல்லும் கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது” என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “கட்சித் தலைவர்கள் அனைவரும் அடுத்த தேர்தலையும் அடுத்த வெற்றியைப் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழகத்தில் 95 சதவிகிதம் டாஸ்மாக், போதை பொருள் கலாச்சாரம் பெருகிவிட்டது. அதனை திசைதிருப்ப இரண்டு அப்பாவி நடிகர்களை பலி கடா ஆக்கியுள்ளனர். தேமுதிகவின் சார்பில் ஜனவரி 9 கடலூரில் நடக்கும் மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமையும்” என்று உறுதிபட தெரிவித்தார்.