தவெக முதல் மாநாடு திருச்சியிலா? மாநாட்டுக்கு அனுமதி கோரி மனு..

 
vijay


நடிகரும் , தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான  விஜய் அவர்களின் தலைமையில் அக்கட்சியின் முதலாவது மாநில மாநாடு திருச்சியிக் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு நடிகர் விஜய் அறிவித்துள்ள நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு,  மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழங்குவது, நலத்திட்டப் பணிகளை செய்வது என அரசியல் முன்னெடுப்புகளை திவீரமாக செய்துவருகிறார் விஜய். 

vijay
 
அடுத்தக்கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்படி முதல் மாநாடு சேலத்தில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.  இதற்காகா தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , சேலம் மாவட்டத் தலைவர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம், ஆத்தூர் ,  தலைவாசல் ஆகிய பகுதிகளில் மாநாட்டிற்கான இடத்தை  ஆய்வு செய்தனர். ஏற்கனவே சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில்  அதிமுக , தேமுதிக மற்றும் பாஜாக ஆகிய கட்சிகள் மாநாடு நடத்திய தனியாருக்கு சொந்தமான  இடத்தினை அவர்கள் பார்வையிட்டனர்.  ஆனால் அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. 

இந்நிலையில் தற்போது  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவதற்காக ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த மனுவில் மாநாட்டிற்கான தேதி குறிப்பிடாமல் கடிதம் வழங்கியதால், தேதி குறிப்பிட்டு கடிதம் வழங்குமாறு ரயில்வே துறை அறிவுறுத்தியிருக்கிறது. அத்துடன் ஜி கார்னர் மைதானம் எவ்வளவு ஏக்கர் பரப்பளவு கொண்டது என  அளவிடும் பணியும் நடைபெற்றதாக தெரிகிறது.   இது தமிழக வெற்றி கழகத்தின் முதலாவது மாநில மாநாடு அரசியல் களத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.