பொங்கலுக்கு திடீர் தளபதியின் துப்பாக்கி வெடிக்குமா..?கலாய்க்கும் ப்ளூசட்டை மாறன்..!!

 
Q Q

சிவகார்த்திகேயனோட இந்த 'திடீர்' வளர்ச்சியை, சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன்  "திடீர் தளபதி கடந்து வந்த பாதை"ங்கிற தலைப்புல நம்ம எஸ்.கே-வை நக்கலடிச்சு சில பாயிண்ட்ஸ்களைப் போட்டுத் தாக்கியிருக்காரு. 

திடீர் தளபதி கடந்து வரும் பாதை:

SWOT Analysis.

* இயல்பிலேயே நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அது இது எது நிகழ்ச்சி மூலம் சினிமாவிற்கு வரும் முன்பே மக்களை கவர்ந்தவர்.

* ஒருசில படங்களில் காமடியனாக நடித்து.. சட்டென காமடி ஹீரோவாகி வெற்றி பெற்றார்.

* அதன்பிறகு சீரியஸ் கேரக்டர்களில் நடித்து மார்க்கெட்டை உயர்த்த பார்த்தார். அதில் வெற்றிபெற முடியவில்லை.

* இதற்கிடையே தயாரிப்பாளராகவும் மாறினார். 

* இதில் 'கனா' மட்டும் சுமாராக போனது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், கொட்டுக்காளி, குரங்கு பெடல் போன்றவை ஓடவில்லை.

* டாக்டர், டான் போன்ற படங்கள் ஹிட்டாகி திரும்பவும் ஃபார்முக்கு வந்தார்.

* ஆனால் ப்ரின்ஸ், மாவீரன், அயலான் போன்றவை.. மண்ணை கவ்வின.

* GOAT இல் தளபதியிடம் துப்பாக்கியை வாங்கி.. 'திடீர் தளபதி'யாக மாறினார்.

* சாய் பல்லவியின் சிறந்த நடிப்பால் 'அமரன்' எதிர்பாராத வெற்றியை பெற்றது.

* பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது போல அமரனின் வெற்றி சாய் பல்லவியை விட.. இவருக்குத்தான் பெரிய மார்க்கெட்டை திறந்தது.

* சம்பளமும் பலமடங்கு ஏறியது.

* இவர்தான் அடுத்த விஜய் என தியேட்டர் ஓனர்களும், சினிமா வல்லுனர்களும் கொம்பு சீவி விட்டார்கள்.

* இதை உண்மையென இவர் உறுதியாக நம்பினார். நான்தான் அடுத்த இளைய தளபதி என முடிவும் செய்தார்.

* அமரன் வெற்றியான சில நாட்களில்.. சோஷியல் மீடியாவில் குறுக்க மறுக்க ஓட ஆரம்பித்தார்.

* ஏகப்பட்ட ஃபோட்டோக்கள், வீடியோக்களை இறக்கினார்.

* திடீரென நல்லக்கண்ணு ஐயாவை சந்திப்பது, IPL போட்டியை நேரில் பார்ப்பது என ரக ரகமாக ஃபோட்டோ, வீடியோக்கள்.

* சிறிய படங்களை எடுத்த படக்குழுக்களை தன் ஆபீஸ்க்கு வரவைத்து ECR பண்ணையார் பாணியில் பாராட்டினார்.

* இதற்கு சோஷியல் மீடியாவில் தர்ம அடி விழவே.. தற்காலிகமாக இந்த சேட்டையை நிறுத்தினார்.

* அமரனுக்கு அடுத்து.. ஆக்சன் ஹீரோவாக 'மதராஸி'யில் களமிறங்கினார்.

* ஆனால் இதில் சாய் பல்லவி அல்லது.. அட்லீஸ்ட் சூரி கூட இல்லாததால் படம் பப்படம் ஆனது.

* இந்த தோல்வியால்...தன்னிடம் தளபதி தந்தது.. அசல் துப்பாக்கியா அல்லது கலாய்ப்பதற்கு தந்த தீபாவளி துப்பாக்கியா என சந்தேகப்பட ஆரம்பித்துள்ளார்.

* பொங்கலுக்கு பராசக்தி மூலம் தனது தளபதியின் ஜனநாயகனுடன் மோதுகிறார்.

* 'குறுக்க இந்த கௌஷிக் வந்தா?' என லுங்கியை மடித்தபடி Raja Saab படத்தை தூக்கிக்கொண்டு.. அதே பொங்கலுக்கு வருகிறார் 'ஆந்திரா சாம்பார்' ப்ரபாஸ்.

* பொங்கலுக்கு திடீர் தளபதியின் (தீபாவளி) துப்பாக்கி வெடிக்குமா?

* We are waiting.என நக்கலடிடுத்திருக்கிறார்.